மனதை புண்படுத்தாத கருத்துகளைப் பதிவிட வேண்டும்: கனிமொழி எம்.பி. அறிவுரை
டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைத்த ஜடேஜா..! சிஎஸ்கே வாழ்த்து!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா அதிக நாள்கள் (1,151 நாள்கள்) முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார்.
36 வயதாகும் ஜடேஜா 80 போட்டிகளில் 3,370 ரன்கள் 323 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கும் ஜடேஜா முக்கியமான நேரங்களில் இந்திய அணிகாக பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங்கில் அசத்தியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் நாள் முதல் ஜடேஜா முதல் இடத்தில் இருந்து வருகிறார். 1,151 நாள்களைக் கடந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஜாக்ஸ் காலிஸ், கபில் தேவ், இம்ரான் கான் ஆகிய தலைசிறந்த ஆல் ரவுண்டர்களை ஜடேஜா முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
400 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஜடேஜாவின் அதிகபட்ச தரவரிசை புள்ளிகள் (475) கடந்த 2024ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சென்னை போட்டியில் பெற்றிருந்தார்.
இதற்கு முன்பாக ஜடேஜா 2017இல் முதலிடத்தில் இருந்தார். வரும் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.
சிஎஸ்கே அணி ஜடேஜாவுக்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
Being G.O.A.T ever since we remember! #WhistlePodupic.twitter.com/YZKwQ8orBk
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2025