செய்திகள் :

தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?

post image

தங்க நகைக்கடன்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒன்பது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் என்ன?

  1. அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவிகித தொகை மட்டுமே கடனாக வழங்க வேண்டும்.

  2. அடகு வைப்பவர்கள், அந்த நகைக்கு தாங்கள்தான் உரிமையாளர் என்ற ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

  3. நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

  4. குறிப்பிட்ட தங்க நகைகளுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்க வேண்டும். கட்டாயம் 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

  5. வெள்ளிப் பொருள்களுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  6. தனிநபர் ஒரு கிலோ வெள்ளி மட்டுமே அடகு வைக்க முடியும்.

  7. நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

  8. 24 கேரட் நகைகளுக்கும் 22 கேரட் நகையின் மதிப்பு அடிப்படையிலேயே கடன் வழங்க வேண்டும்.

  9. அடகு வைக்கப்பட்ட நகையை திருப்புவதற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர் செலுத்திய 7 நாள்களுக்குள் நகையை திருப்பி அளிக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கியில்லா நிறுவனம், நகையின் உரிமையாளருக்கு தாமதமாகும் நாளொன்றுக்கு ரூ. 5,000 இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க