தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்த 450 வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு கருவிகள்
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 450 வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான கட்டுப்பாட்டு கருவிகள் சனிக்கிழமை வந்தன.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் 2026-இல் பயன்படுத்துவதற்காக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு இந்திய தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பெங்களூரு, பெல் நிறுவனத்தின் புதிய எம்-3, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான 450 கட்டுப்பாட்டு கருவிகள் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்திற்கு வரப்பெற்ற 450 கட்டுப்பாட்டு கருவி இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியரகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.