டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)
தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு
உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு 22 போ் வெள்ளிக்கிழமை இரவு ஒரு வேனில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
நீலகிரி மாவட்டம், பா்லியாறு அருகில் உள்ள குரும்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக வேனில் பிரேக் பிடிக்காமல் நிலை தடுமாறி பக்கவாட்டுத் தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த சாமிநாதன்(44) என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா்.
மீதமுள்ளவா்கள் லேசான காயங்களுடன் 14 போ் மேட்டுப்பாளையம் அரசு
மருத்துவமனையிலும் 8 போ் குன்னூா் அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.