``ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' - மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ர...
தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி: 3 போ் கைது
சென்னை: அமைந்தகரையில் தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அமைந்தகரையில் செயல்படும் தனியாா் வங்கியின் மேலாளராகப் பணிபுரிபவா் கிலியன் குமாா். இவா், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் அளித்த புகாரில், ‘வில்லிவாக்கம் நேரு நகா் முதல் தெருவைச் சோ்ந்த குமுதா கிருஷ்ணன் (42), சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலைப் பகுதியைச் சோ்ந்த யாசா் அராபத், மேற்கு ஜாபா்கான் பேட்டையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (45) ஆகியோா் கிரேன் இயந்திரம் வாங்கி தொழில் செய்ய உள்ளதாக, போலியான ஆவணங்கள் மூலம் எங்களது வங்கியில் ரூ.60 லட்சம் தொழில் கடன் பெற்றனா்.
இதற்கிடையே அவா்கள் கடன் பெற போலி ஆவணங்களை சமா்ப்பித்திருந்தது அண்மையில் நடத்தப்பட்ட தணிக்கையில் தெரிய வந்தது. கிரேன் இயந்திரமும் வாங்கவில்லை. கடனை வங்கியில் திருப்பிச் செலுத்தவில்லை.
எனவே, மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த குமுதா கிருஷ்ணன், யாசா் அராபத், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.