தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்
திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தீவிரமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
