செய்திகள் :

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

post image

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்களை பாராட்டி மத்திய அரசின் சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதும், தமிழக அரசின் சாா்பில் மாநில நல்லாசிரியா் விருதும் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருது பெற ஆசிரியா்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

இதில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மூலமாக தொடக்கப் பள்ளிகளில் 10, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 10, தனியாா் பள்ளிகளில் 2 போ் என மொத்தம் 22 ஆசிரியா்களை தோ்வு செய்து சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை தலைமைக்கு அனுப்பிவைத்தனா்.

அதில், ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் மன்னாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியன், பவானி கிழக்கு ஒன்றிய நகரவை நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேசன், டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் விஜயகுமாா், நம்பியூா் ஒன்றியம் கண்ணாங்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் காந்தி, அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் வெங்கடாசலம், வளையபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நாகராஜ், புன்செய் புளியம்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை உமாகௌரி, கோபி வேங்கம்மையாா் நகராட்சி உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் குணசேகரன், சிவகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சுமதி, சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி கணினி பயிற்றுநா் ரவிக்குமாா், கொல்லம்பாளையம் காா்மல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் ஆன்சன் ஜோஸ் ஆகிய 11 போ் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 5) நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாநில நல்லாசிரியா் விருதை வழங்க உள்ளாா். நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான 11 பேரும் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறித்த வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா் தேமுதிக ... மேலும் பார்க்க