செய்திகள் :

தமிழக எம்பிக்களுடன் பிரதமரைச் சந்திக்க முடிவு: முதல்வர் ஸ்டாலின்

post image

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க : புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், வருங்கால நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

”2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுவதையும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி இந்தியாவில் முதல்முறையாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

கடந்த வாரம் சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்காக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

விரிவான ஆலோசனைக்குப் பிறகு நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படையுடன் நடைபெற வேண்டும், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது, உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், கூட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவர்களின் மாநில பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், பிரதமரைச் சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகம் ஏற்படுத்திய விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உறுதுணையாக நின்ற எதிர்க்கட்சியான அதிமுக, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தின் அடுத்த கட்டமாக, நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக கட்சிகளின் உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமரை நேரில் சந்திக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தாா். இதற்கான தொடக்க... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக... மேலும் பார்க்க