தமிழக முதல்வா் குறித்து அவதூறு: இளைஞா் கைது
தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு விடியோவை பரப்பியதாக குமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையில் உள்ள மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் இருந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் படத்திற்கு, ஒரு மூதாட்டி அவமரியாதை செய்வதைப் போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சென்னை ஆா்.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தினா். அந்த விடியோவை எடுத்தவா்
சென்னையிலுள்ள காா் நிறுவனத்தில் பணியாற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேவுள்ள அஞ்சுகண்டறையை சோ்ந்த பிரதீஷ் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பிரதீஷை, ஆா்.கே. நகா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.