தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து சேவைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
'தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? - அரசுக்கு வேல்முருகன் கேள்வி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?' என அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/5bdaa5d4-796a-4b74-b5bf-707df40b169c/IMG_20230920_WA0009.jpg)
பத்திரிகையாளர்களிடம் பேசிய வேல்முருகன், 'கனிமவளக் கொள்ளை இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக எப்போதுமே நின்றிருக்கிறோம். புதுக்கோட்டையில் ஜகபர் அலி கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். தவாக சார்பில் அவரின் குடும்பத்தினரை சந்தித்து 1 லட்ச ரூபாய் நிதி வழங்கவிருக்கிறோம். அதேமாதிரி, அவரின் கொலையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழ்த்தேசிய போராளியான முத்துகுமாரின் 14 வது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கத்திற்காகத்தான் புதுக்கோட்டை வந்திருக்கிறேன்.
தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா? உயர் நீதிமன்றம் வரை சென்றுதான் வீரவணக்கம் செலுத்த அனுமதி பெற வேண்டியிருக்கிறது. காவல்துறையும் அதை கையில் வைத்திருக்கும் முதல்வரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-17/0ujk7lu1/6761b0feec711.jpg)
விஜய் கேட்காமலேயே ஆளுநரை அவர் சந்தித்த ஒரு சில வாரங்களில் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதில் அரசியல் இருப்பதாகவே பார்க்கிறேன்.' என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play