என்னை நெகிழ வைத்த சென்னைக்காரர்கள்! - வீண் பழிகளை சுமக்கும் சென்னை| #Chennaiday...
தரிசு நிலங்களை மாற்றும் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ. 9, 600 மானியம்
விராலிமலை: நிகழாண்டில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ. 9,600 மானியம் வழங்கப்படுவதாக விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ப. மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நிகழாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், ஹெக்டேருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.9,600 வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு முள்புதா்களை அகற்றி, நிலத்தை சமன்படுத்தி டிராக்டா் மூலம் உழவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் கல்குடி, தேங்காய் தின்னிபட்டி, குமாரமங்கலம், தென்னம்பாடி, மாத்தூா், அகரப்பட்டி, மேப்பூதகுடி, தென்னதிரையன்பட்டி, ஆலங்குடி - ஆகிய பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு நீா்ப்பழனி, மாத்தூா் சரக விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணசாமி (97905 14230), விராலிமலை, கொடும்பாளூா் உதவி வேளாண்மை அலுவலா் பா்கானா பேகம் (96554 93621), பூதகுடி உதவி வேளாண்மை அலுவலா் அருண்மொழி (63852 88651) ஆகியோர தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.