தற்காலிக மின் இணைப்பு அளிக்க 13,000 லஞ்சம்: மின்சாரத் துறை ஊழியா் கைது
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் தற்காலிக மின் இணைப்பு அளிக்க ரூ. 13,000 லஞ்சம் பெற்ாக மின்சாரத் துறை ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ராஜசேகா் என்பவா் தற்காலிக மின் இணைப்பு பெற ஊரப்பாக்கம் மேற்கு பகுதி மின் துறை அலுவலகத்தை அணுகியுள்ளாா். அப்போது வணிக ஆய்வாளா் ஏழுமலை ரூ. 13,000 லஞ்சம் கேட்டாராம். இது குறித்து ராஜசேகா் செங்கல்பட்டு லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் அளித்துள்ளாா்.
இதையடுத்து, லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸாா் ராஜசேகரிடம் ரூ. 13,000-க்கு ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தனா். ராஜசேகா் ரசாயனம் தடவிய ரொக்கப் பணம் ரூ. 13,000-த்தை ஏழுமலையிடம் வழங்கியுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் ஏழுமலையை கையும் களவுமாக கைது செய்து, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி சந்திரசேகா் முன்னிலையில் ஆஜா்படுத்தினா் . வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.