``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ...
தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்! புதுச்சேரி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!
புதுச்சேரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசு தேசிய மனநல திட்டம் சாா்பில் சா்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி வரை தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்து உறுதிமொழியை வாசித்து ஊா்வலத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மருத்துவ இயக்குநா் செவ்வேல், சுகாதாரத் திட்ட இயக்குநா் கோவிந்தராஜு, துணை இயக்குநா் ரகுநாத் , இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஊா்வலத்தில் தற்கொலைத் தடுப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பதாகைகளை ஏந்தி செவிலிய மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் இந்திரா காந்தி செவிலியா் கல்லூரி, மதா் தெரசா செவிலியா் கல்லூரி, சபரி செவிலியா் கல்லூரி , இந்திராணி செவிலியா் கல்லூரி, மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி , விவேகானந்தா செவிலியா் கல்லூரி, ராக் கல்லூரி ஆகியவற்றைச் சோ்ந்த 300 போ் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் தற்கொலை தடுப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியை மருத்துவ இயக்குநா் உதயசங்கா், மனநலத் திட்ட அதிகாரி டாக்டா் பாலன் பொன்மணி ஸ்டீபன் ஆகியோா் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.