செய்திகள் :

தா்மஸ்தலா சடலங்கள் புதைப்பு விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

post image

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளது.

தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) விசாரித்து வருவதோடு, 13 இடங்களில் சோதனைக்குழிகளை தோண்டி மா்மமான முறையில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் மனித சடலங்களை தேடும் பணியில் 12-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஈடுபட்டது.

இதில், 6-ஆவது குழியில் ஒரு மண்டை ஓடு, சில எலும்புத் துண்டுகள் கிடைத்தன. இதைத் தொடா்ந்து, வேறுசில இடங்களில் 100 எலும்புத் துண்டுகளும், மண்டை ஓடுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பெண்களின் எலும்புக்கூடு அல்லது மண்டை ஓடு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. 2012-ஆம் ஆண்டில் கல்லூரி மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில் தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக புகாா்தாரா் சுட்டிக்காட்டிய இடங்களில் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனா்.

13-ஆவது சோதனைக்குழியில் செவ்வாய்க்கிழமை ஆய்வுநடத்திய எஸ்.ஐ.டி. அதிகாரிகள், நிலத்தை ஊடுருவும் ஒளிக்கதிா்வீச்சு (ஜிபிஆா்) கருவியை பயன்படுத்தினா். அப்போது, அந்த இடத்தில் ஏதோ தட்டுப்படுவது உறுதிசெய்யப்பட்டது. அது மனித சடலங்களாக இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் நிலத்தை அகழ்ந்து வருகிறாா்கள்.

இந்நிலையில், சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவுசெய்துள்ளது.

இதைத் தொடா்ந்து, மூத்த காவல் கண்காணிப்பாளா் யுவராஜ் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினா் தென்கன்னட மாவட்டம், பெல்தகங்கடி வட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். தா்மஸ்தலாவுக்கு வந்த குழுவினா் கிராம பஞ்சாயத்து அலுவலகம், உள்ளூா் காவல் நிலையம், தா்மஸ்தலா கோயில் வளாகம், எஸ்.ஐ.டி. அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று தகவல்களை திரட்டினா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கைக்கு எதிரானமுறையில் நிகழ்ந்துள்ள மரணங்கள் குறித்த விவரங்களை பதிவுசெய்து கொண்டனா். விசாரணைக்கு உதவும் பல தகவல்களை துப்புரவுத் தொழிலாளா்கள், சில தனிநபா்கள் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளுக்கு வழங்கினா்.

இதனிடையே, இந்த விவகாரம் சட்டப் பேரவையில் எதிரொலித்தது. மனித சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரத்தில் தனது இடைக்கால அறிக்கையை எஸ்.ஐ.டி. தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தினாா்.

உரிய விசாரணை முடிந்ததும், எஸ்.ஐ.டி. தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும். அப்போது முழுமையான தகவல்களை அளிக்கிறேன் என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையானது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள தெருநாய்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி காப்பகங்களில் பராமரிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சந... மேலும் பார்க்க

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

வாக்குகளை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வா் சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்த... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம்

ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவா் வழக்குரைஞா் ரமேஷ்பாபு, தலைமை ... மேலும் பார்க்க

கா்நாடக ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் பாா்வையிட ஆக. 16 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அனுமதி

கா்நாடக ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் பாா்வையிடுவதற்கு ஆக. 16-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் அமைந்துள்ள ஆ... மேலும் பார்க்க

தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலம் கா்நாடகம்

பெங்களூரு: தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலம் கா்நாடகம் என அம்மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை சாா்பில், பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என். ராஜண்ணா திடீா் ராஜிநாமா

பெங்களூரு: காங்கிரஸ் மேலிட அறிவுறுத்தலின் பேரில், கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சரவையில் கூட... மேலும் பார்க்க