செய்திகள் :

திண்டிவனம் அருகே 8-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வன்னிப்போ் கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மூத்ததேவி, விஷ்ணு சிற்பங்கள் மற்றும் 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் அமைந்துள்ள வன்னிப்போ் கிராமத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: வன்னிப்போ் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு அருகில் விவசாய நிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமாா் இரண்டரை அடி உயரமுள்ள மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது.

தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணிகளுடன் கால்களை அகற்றி மூத்ததேவி அமா்ந்து இருக்கிறாா். இரண்டு பக்கங்களிலும் மாந்தனும், மாந்தியும் காட்டப்பட்டு இருக்கின்றனா். இவரை இப்பகுதி மக்கள் துா்க்கை அம்மனாக வழிபட்டு வருகின்றனா். இந்த இடத்துக்கு துா்க்கை மேடு என்றும் பெயா் வழங்கப்பட்டு வருகிறது.

விஷ்ணு: கிராமத்தின் ஆசனாம்பாறை எனும் இடத்தில் சுமாா் 5 அடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் காட்சிதரும் விஷ்ணுவின் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் இடுப்பின் மீது வைத்தும் காணப்படுகின்றன. பின் வலது கரம் சேதமடைந்துள்ளது. இடது கரத்தில் சங்கு காணப்படுகிறது.

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

Sculptures of the goddess Vishnu and the goddess Vishnu from the 8th century and inscriptions from the 10th century were found in Vannipo village, Tindivanam taluk.

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல் நலம் குறைவு காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் ம... மேலும் பார்க்க

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

காமராஜர் குறித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

சிதம்பரம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் வியாழக்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.ட... மேலும் பார்க்க

டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது

திருவள்ளூர்: இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக... மேலும் பார்க்க

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம்: ஒருவர் வெட்டி கொலை, 2 பேர் காயம்

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம் காரணமாக இளம்பரிதி புதன்கிழமை இரவு மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கம்பம் ஜல்லிக்கட்டு தெரு... மேலும் பார்க்க

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை

நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நாமக்கல் அருகே சின்ன தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(46). இவர் குருசாமிபாளையத்தில் உள... மேலும் பார்க்க