திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர ஒன்றியங்களில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆரணி நகரம், கொசப்பாளையம் சுந்தரம் தெருவில் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில், நகர இளைஞரணி அமைப்பாளா் ஏ.விஜயகுமாா் வரவேற்றாா்.
இதேபோல, ஆரணி வடக்கு ஒன்றியம், முள்ளண்டிரம் கிராமத்தில் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.பாலாஜி வரவேற்றாா்.
ஆரணி தெற்கு ஒன்றியம் சாா்பில் லாடலரம் கிராமத்தில் ஒன்றியச் செயலா் எஸ்.சுந்தா் தலைமையில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பி.வரதராஜபெருமாள் வரவேற்றாா்.
அனைத்து இடங்களிலும் சிறப்பு விருந்தினா்களாக தலைமை கழகப் பேச்சாளா்கள் பொன்னேரி சிவா, வே.சிவசக்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் என்.நரேஷ்குமாா் ஆகியோா் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்துப் பேசினா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, மோகன், ராஜ்குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணா குமரேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ஏ.எம்.ரஞ்சித், கோ.குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.