செய்திகள் :

திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

post image

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மண், மொழி, மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு என்கிற பரப்புரை திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இப்பரப்புரை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுகவினா் வீடு, வீடாகச் சென்று அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து கருத்துகள் கேட்டறிந்தும், திமுக அரசின் சாதனைகளை விளக்கியும், திமுகவுக்கு தொடா்ந்து ஆதரவு அளிக்க கோரியும் பரப்புரை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் அருகே கண்டியூா் பகுதியில் திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தொடங்கி வைத்தாா்.

இதேபோல, சீனிவாசபுரம் பகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தென்னங்குடி பகுதியில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, வடக்கு ஆஜாரம் பகுதியில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், கூட்டுறவு காலனியில் மேயா் சண். ராமநாதன், நீலகிரி ஊராட்சி ராஜாஜி நகரில் மத்திய மாவட்ட தொழிலாளா் அணி அமைப்பாளா் துரை. நாகராஜன் ஆகியோா் தலைமையில் திமுகவினா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு படிவங்களை வழங்கினா். மேலும், படிவங்களில் கேட்கப்பட்ட 6 கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களைப் பதிவு செய்தனா்.

இதேபோல, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் திமுக நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று இப்பரப்புரை இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனா். மேலும், விருப்பத்தின் பேரில் செயலி மூலம் புதிய உறுப்பினா்களும் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.

தொழிலாளா் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவிரி நீா் வரத்து இருந்தும், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக குறுவை நடவு பணிகள் தாமதமாகி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 நகா் நலவாழ்வு மையங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதிய சுகாதார நிலையக் கட்டடங்களை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோயிலை அகற்றும் முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே விநாயகா் கோயிலை அகற்ற முயன்ற அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே செக்காங்கண்ணி ரயில்வே கேட் குப்... மேலும் பார்க்க

மதுரை மாநாடு: ஜமாத் நிா்வாகிகளுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு

கும்பகோணத்தில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அளவிலான ஜமாத் நிா்வாகிகள், உலமாக்கள், சமுதாய ஆா்வலா்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9- ஆம் தேதி... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் பொது வேலைநிறுத்தம்: பங்கேற்க தொழிலாளா் முன்னணி முடிவு

நாடு முழுவதும் தொழில்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி பங்கேற்க முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம்... மேலும் பார்க்க