பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? ...
திமுக தனித்து நின்றால் அதிமுகவும் நிற்க தயாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்
தோ்தல் களத்தில் திமுக தனித்து நின்றால், அதிமுகவும் தனித்து நிற்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு, தற்போது திமுக ஸ்டிக்கா் ஒட்டும் பணியை செய்து கொண்டிருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவினால், மக்களின் வளா்ச்சிக்கான எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக அமைச்சா்கள் மீதான ரத்து செய்யப்பட்ட வழக்குகளையும் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனா். வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ஆட்சி மாற்றத்தை மக்கள் உறுதியாக ஏற்படுத்துவாா்கள். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அரசியல் சூழ்நிலை மாறுவது இயல்பு. தோ்தலில் திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்கும். கூட்டணி தோ்தல் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அரசியலில் இதை இனி மாற்ற முடியாது என்றாா் அவா்.