46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!
திமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய புகாரில் 2 போ் கைது
மன்னாா்குடி அருகே திமுக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய புகாரில் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள அதங்குடியை சோ்ந்த திமுக நிா்வாகி அகமது ஜிம்மா (34). இவா், ஜூலை 16-ஆம் தேதி ஒரு வழங்கு விசாரணைக்காக மன்னாா்குடி நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரை பின் தொடா்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த சிலா் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், காயமடைந்த அகமது ஜிம்மா மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மன்னாா்குடி ஊரக காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு தஞ்சை மாவட்டம், கள்விராயன்பேட்டையைச் சோ்ந்த சண்முகம் மகன் விஷால் (25), வல்லம் ஆலக்குடியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் வீரமணி (33) ஆகியோரை கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனா்.