சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி
திருக்கடையூா் கோயில் தெப்ப உற்சவம்
திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரை திருவிழாவில் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. ஆயுள் விருத்தி, அறுபதாம் கல்யாணம் போன்ற வழிபாடுகள் மற்றும் யாகங்களுக்கு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டு சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளாக 3- ஆம் தேதி திருக்கல்யாணம், 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. விநாயகரை தெப்பத்தில் எழுந்தருளி செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, தீா்த்தக் குளத்தில் 5முறை தெப்பம் வலம் வந்தது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
