செய்திகள் :

திருச்சி: காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி மோசடி; ரூ.1 லட்சத்தை ஏமாற்றியவர் கைது; என்ன நடந்தது?

post image

திருச்சி மாநகரம் வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் தெளபிக். இவர், திருச்சி அரசு மருத்துவமனை எதிரே செயல்படும் ஒரு டீக்கடையில் பணியாற்றி வருகிறார்.

அந்தக் கடையில் டீ குடிக்க வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ என்கிற ஷியாமுக்கும் (வயது: 24), தெளபிக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, தெளபிக்கிடம், தன்னை காவல்துறையில் பணியாற்றும் காவலர் என கூறி அறிமுகமான ஜெத்ரோ, அவருடன் பழகி வந்திருக்கிறார்.

ஜெத்ரோ
ஜெத்ரோ

இந்த நிலையில், காவல்துறையில் ஏலம் விடும் வாகனங்களைக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி ஜெத்ரோ, தெளபிக்கிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார்.

ஆனால், வாக்குறுதி கொடுத்தபடி வாகனங்களை ஏலம் எடுத்துத் தராமலும், பணத்தைத் திருப்பி கேட்டால் பணத்தையும் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து, தெளபிக் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில், ஜித்ரோ திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே உள்ள ஜே.ஜே நகர்ப் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அப்படிக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்குச் சென்று அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் காவல்துறையில் பணியாற்றுகிறேன் எனக் கூறி ஏமாற்றியதும், தெளபிக்கிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது.

police
police

அதனை அடுத்து, ஜெத்ரோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் ரூ. 1 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க

வட்டிக்குக் கடன்... பத்திரத்தில் கையெழுத்து போடாத மீனவர் கத்தியால் குத்திக் கொலை - குமரி ஷாக்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாகப் புகார்; தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு; நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம்,மாத்தூர்கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67).இவர் திருச்சிராம்ஜிநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "மாத்தூர்கிராமத்தில்ச... மேலும் பார்க்க

மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார்; 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து 4 பேர் காயம்..

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா என்பவருடன் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ள... மேலும் பார்க்க

`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு கார்த்திகேயன், ஜனனி என்று 2 பிள்ளைகள். இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்... மேலும் பார்க்க