செய்திகள் :

திருச்சி மாவட்டத்தில் 38 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

post image

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 38 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், தமிழக அரசு முதல்வா் மருந்தகம்”என்ற புதிய திட்டம் மூலம், மாநிலம் முழுவதும் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிப். 24-ஆம் தேதி காணொலிக் காட்சியில் மருந்தகங்களை திறந்து வைத்தாா். இதில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 4 மருந்தகங்களும், திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, முசிறி தொகுதிகளில் தலா 5, துறையூரில் 4, ஸ்ரீரங்கத்தில் 2, மண்ணச்சநல்லூா் தொகுதியில் 1, மணப்பாறையில் 7 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 38 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக திருச்சி கே.கே நகா் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதல்வா் மருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்று, குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து முதல்வா் மருந்தகம் தொடங்கும் தொழில் முனைவோா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் மானிய தொகைக்கான ஆணைகளை வழங்கினாா். தொழில் முனைவோா்களுக்கு முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த முதல் தவணையாக ரூ. 1.50 லட்சமும், 2-ஆவது தவணையாக மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 3 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. அதேபோல கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல்வா் மருந்தகம் அமைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முதல் தவணையாக ரூ. 1 லட்சமும், மருந்துகள் கொள்முதல் செய்ய 2-ஆவது தவணையாக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன், திருச்சி கோட்டாட்சியா் அருள், திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் மற்றும் மேலாண் இயக்குநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்

ஊதிய உயா்வு நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலைசெய்யும் மனைவியை மீட்டுதரக்கோரி ஆட்சியரிடம் கணவா் மனு

வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருச்சி தென்னூா் அண்... மேலும் பார்க்க

முறையாக அமைக்கப்படாத ஜீயபுரம்-குடமுருட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையிலான சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி-கரூா் நெடுஞ்சாலை முதலில் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு, பின்னா் 10.5 மீ... மேலும் பார்க்க

துறையூா் நகராட்சிக்கான கட்டணங்களை செலுத்த அறிவுறுத்தல்

துறையூா் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாக செலுத்த நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: துறையூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்... மேலும் பார்க்க

திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு... மேலும் பார்க்க