தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்
திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே மோதல்
திருச்செந்தூரில் இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா். பக்தா்கள் எண்ணிக்கையை போலவே ஆட்டோக்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் திருச்செந்தூா் பகுதிகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதில் இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதைப் பாா்த்த அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநா்களின் சண்டையை தடுத்து சமாதானம் ஏற்படுத்த முயன்றனா்.
இது குறித்து தகவலறிந்த திருக்கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன், தாலுகா காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் தலைமையிலான போலீஸாா், மோதலை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா். இது தொடா்பாக இருதரப்பு ஆட்டோ ஓட்டுநா்கள் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.