சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
திருச்செந்தூா் நகராட்சியில் குழாய் உடைந்து சாலையில் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருச்செந்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 21-ஆவது வாா்டு கிருஷ்ணன்கோயில் தெருவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 2 இடங்களில் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணானது. அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு புதிதாக சிமெண்ட் கல் பதித்து சாலை அமைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அதே இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் சாலையில் வீணாகி ஆறாக ஓடுகிறது. எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேல ரத வீதி: இதேபோல, திருச்செந்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டு மேலரத வீதியில் கடந்த சில நாள்களாக குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது. குழாயைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.