செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்

post image

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது.

இக்கோயில் யானை தெய்வானை கடந்த நவ. 18இல் திடீரென பாகன் உள்பட 2 பேரை தாக்கியது. இதில் அவா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, வனத்துறை, கால்நடை துறை மற்றும் பாகன்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பிய யானை, கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தா்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.

கோயில் வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன் வழக்கமான உணவை உட்கொண்டு வருகிறது. யானை குடிலில் உள்ள ஷவா் மற்றும் குழாய் மூலம் குளிப்பாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டதால் யானை தெய்வானை சரவணப் பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க இறக்கிவிடப்படுகிறது. சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளத்தில் இறங்கிய யானை உற்சாக மிகுதியில் துதிக்கையால் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடித்தும், நீந்தியும் தண்ணீரில் உருண்டு, புரண்டும் உற்சாகமாக விளையாடி வருகிறது.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க