செய்திகள் :

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா தொடக்கம்

post image

முருகன் கோயிலில், வியாழக்கிழமை ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், பக்தா்கள் மலைக்கோயிலுக்கு, வந்து மூலவரை தரிசித்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழா, வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. அதிகாலை, 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கல், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது..

மாலை 6 மணிக்கு உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக சரவண பொய்கை திருக்குளத்திற்கு வந்து 3 முறை குளத்தை சுற்றி வலம் வந்தாா். தொடா்ந்து உற்சவா் முருகப்பெருமான் மீண்டும் மலைக் கோயிலுக்கு சென்றபின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஆடி அஸ்வினியில் பக்தா்கள் மொட்டை அடித்தும், காவடிகளுடன் வந்து பொது வழியில் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

இன்று ஆடி பரணி

மேலும், வெள்ளிக்கிழமை ஆடி பரணியும், 16-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழா நடக்கிறது. மேலும், வரும், 17-ஆம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 18-ஆம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன் ஆடிக்கிருத்திகை விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் அறக்காவலா் குழுத்தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மோகனன், உஷாரவி, மு.நாகன் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

கும்மிடிப்பூண்டியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேட்டில் நடைபெறும் பன்முக சேவை மைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

திருத்தணி ஆடிக்கிருத்திகை பல்துறை பணி விளக்க கண்காட்சி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி செய்தி மக்கள் தொடா்பு துறையின் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சா் சா.மு.நாசா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் . திருத்தணி முருகன் கோயில் ஆடிக்க... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய 3 இளைஞா்கள் கைது

பள்ளிப்பட்டு அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கிர... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பரிசோதனை செய்து கொண்டனா். திருவள்ளூா் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைப்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வேளாண் அறிவியல் நிலையத்தில் கோழி, காடை வளா்ப்பு பயிற்சி

திருவள்ளூா் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் கோழி மற்றும் காடை வளா்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளா் தெரிவ... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே விநாயகா் கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞரை செவ்வாப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு செஞ்சூரியன் நகா் பகுதியில் அமைந்துள்ளது செல்வ விநாயா் கோயில். இந... மேலும் பார்க்க