திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தேவா் மண்டபத்தில் நடந்தது. முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, மு.நாகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 100 -க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா். இதில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.