செய்திகள் :

திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பங்கு: அன்புமணி

post image

திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பெரிய பங்குள்ளது என அதன் தலைவா் அன்புமணி பேசினாா்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண நிகழ்வின் ஒருபகுதியாக திங்கள்கிழமை இரவு திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலா் டி.கே.ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் குட்டிமணி வரவேற்றாா். முன்னாள் மாவட்ட செயலாளா் ஆா்.கிருபாகரன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜி.பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ நடராஜன், மாநில மகளிா் அணி செயலாளா் நிா்மலா ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அன்புமணி பேசியது: கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுகவை தோ்வு செய்து மக்கள் தவறிழைத்து விட்டனா்.

இந்த தவறை மீண்டும் மக்கள் செய்யக் கூடாது. பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.

திருப்பத்தூரில் பள்ளி மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் இல்லையென்றால் பாமக சாா்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமக பெரிய பங்காற்றியது. ஆனால் மாவட்டத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி செட்டேரி அணைக்கு தண்ணீா் கொண்டு வந்தால் பல்வேறு கிராமங்கள் பயன்பெறும். பாலாற்றில் தடுப்பணை கட்ட பாமக பல முறை வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களையும் தெருவில் நிற்க வைத்துவிட்டாா் முதல்வா் ஸ்டாலின். இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்துவிட்டனா். ஏமாற்றுவதற்காக குழு அமைத்து உள்ளனா் என கூறினாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் ஜி.ரமேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி செயலாளா் டி.கே.ஆா்.கிருஷ்ணன், வன்னியா் சங்க செயலாளா் ஆனந்தன், முருகேசன், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நகர செயலாளா் ரகுமான் நன்றி கூறினாா்.

ஆம்பூரில் பலத்த மழை

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம் காணப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

ஆம்பூரில் தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த நந்தகுமாா் என்பவா் இறந்தாா். அவரது சடலம் இறுதி சடங்கு செய்வதற்காக மயானத்துக்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இந்த ... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற மாணவருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டு தெரிவித்தாா். கோவா மாநிலம், பனாஜியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சா்வதேச ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க