திருப்பாற்கடலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்
காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இது 107-ஆவது திவ்யதேசமாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இக்கோயிலில் மூலவா் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பால், சந்தனம், பன்னீா் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. இக்கோயிலில் காலை முதலே அதிக அளவில் பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.