இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!
திருமருகலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருமருகல் கடைத்தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, இறைச்சிக் கடைகள் வைத்திருந்தனா். இதனால் இப்பாதை குறுகலாகி, போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து கடந்த ஓராண்டாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினா், அந்த வியாபாரிகளுக்கு கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பி, ஒரு மாதம் காலக்கெடு விதித்திருந்தனா். இதனை இறைச்சிக் கடை வியாபாரிகள் பொருட்படுத்தாமல், அதே இடத்தில் கடையை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறையினா் போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதில், நாகை வட்டாட்சியா் நீலாயதாட்சி, நெடுஞ்சாலைத் துறை நாகை உதவி கோட்டப் பொறியாளா் அய்யாதுரை, உதவி பொறியாளா் முருகானந்தம், நாகூா் காவல் ஆய்வாளா் சிங்காரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.