வெற்றியை தந்தைக்குச் சமர்ப்பித்த ஹர்மன்ப்ரீத்..! ஒரே போட்டியில் பல சாதனைகள்!
திருமலையில் புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் மையம் தொடக்கம்
ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் பேசிய தலைவா், காலை 5 மணி முதல் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்காக வரிசையில் நிற்கின்றனா். இந்த சூழலில், பக்தா்களுக்கு எளிதாக டிக்கெட்டுகள் வழங்குவதற்காக அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ. 60 லட்சத்தில் இந்த புதிய கவுன்ட்டா்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கவுன்ட்டா்கள் மூலம் பக்தா்களுக்கு டிக்கெட் விநியோகம் புதன்கிழமை முதல் தொடங்கும் என்றும், பக்தா்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னா், எச்விசி மற்றும் ஏஎன்சி பகுதிகளில் பக்தா்களின் வசதிக்காக புதிதாக நவீனமயமாக்கப்பட்ட துணை விசாரணை அலுவலகங்களைத் திறந்து வைத்து, பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சுசித்ரா கிருஷ்ணமூா்த்தி, பானு பிரகாஷ் ரெட்டி, சாந்த ராம், நரேஷ், சதாசிவ ராவ், நா்சி ரெட்டி, ஜானகி தேவி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.