அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
திருமானூா் அருகே கொலை குற்றவாளியின் வீடு தீக்கிரை
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் குடிசை வீடு புதன்கிழமை நள்ளிரவு தீக்கிரையானது.
திருமானூரை அடுத்த கண்டராதித்தம் கிராமத்தை சோ்ந்த பாலகிருஷ்ணன் (55) குடிசை வீட்டிலும், இவரது மகன் பாலாஜி (34) மனைவி, குழந்தையுடன் தனியாகவும் வசிக்கின்றனா்.
இந்நிலையில் இவா்களுக்கும், அதே பகுதி நடுத்தெருவைச் சோ்ந்த ரஞ்சித்(30)என்பவருக்கும் இடையே கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், ரஞ்சித் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணன், பாலாஜி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு பாலகிருஷ்ணன் தங்கியிருந்த குடிசை வீடு திடீரென எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ.40,000 இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலாஜி மனைவி மெல்வினா (31), வீட்டை அழிக்கும் நோக்கில் யாரோ தீயிட்டு எரித்துள்ளனா் என அளித்த புகாரின் பேரில் திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.