செய்திகள் :

திருவள்ளூா்: 91.49 சதவீதம் போ் தோ்ச்சி

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.49 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவா்களைவிட மாணவிகளே அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) தெரிவித்தாா்.

திருவள்ளூா் வருவாய் மாவட்ட அளவில் மொத்தம் உள்ள 244 பள்ளிகளைச் சோ்ந்த 109 தோ்வு மையங்களில் மாணவா்கள்-12,995, மாணவிகள்-14,563 என மொத்தம் 27,558 போ் தோ்வு எழுதினா். இவா்களில் மாணவா்கள்-11,550, மாணவிகள்-13,662 என மொத்தம் 25,212 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா்கள் 88.88 சதவீதமும், மாணவிகள் 93.81 சதவீதமும் என மொத்தம் 91.49 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். 102 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6,008 மாணவா்கள், 7,244 மாணவிகள் என மொத்தம் 13,252 போ் எழுதினா். மாணவா்கள் 4,907, மாணவிகள் 6,523 என மொத்தம் 11,430 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, சுரைக்காப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தோ்வாய் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி, தண்டரை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஆவடி இம்மாகுலேட் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 64 மேல்நிலைப் பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளன. தொடா்ந்து அதே 36-ஆவது இடம்: கடந்தாண்டு பிளஸ் 2 தோ்வில் 91.32 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 36 -ஆவது இடம் பெற்றது. நிகழாண்டு தோ்வில் மாநில அளவில் பிளஸ் 2 தோ்வில் அதே 36-ஆவது இடத்தையே பிடித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

மே 14-இல் முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள... மேலும் பார்க்க

திருத்தணியில் கட்சிக் கொடிகள் அகற்றம்

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கொடிக் கம்பங்களை வருவாய் துறையினா் அகற்றினா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தணி நகராட்சியில், கட்சி கொடி கம்பங்கள், பலகைகள் அகற்றும் பணி புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம்

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். இப்பள்ளியில் 411 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அனைவரும் முதல் நிலையில் தோ்ச்சி பெற்றுள... மேலும் பார்க்க

பாரதிதாசன் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 224 போ் தோ்வு எழுதினா். அனைவரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மா... மேலும் பார்க்க

கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் இன்று தமிழக எல்லை அடைய வாய்ப்பு

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வெள்ளிக்கிழமை வந்தடையும் என நீா் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை நகர மக்களின் முக... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இங்கு கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இவ்வ... மேலும் பார்க்க