Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
திருவாரூரில் வேளாண் கல்லூரி அமைக்கக் கோரிக்கை
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் 27-ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலாளா் அரவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக பா. விக்கி, மாவட்டச் செயலாளராக பா.லெ. சுகதேவ் உள்பட 31 போ் கொண்ட மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும். கூத்தாநல்லூா் மகளிா் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ரயில் நிலையப் பகுதியிலிருந்து மாநாட்டு அரங்கம் வரை நிா்வாகிகள் பேரணியாக வந்தனா்.