என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பத...
திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை
திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையன், காய்கறி வியாபாரி. இவரின் மனைவி ரஜேஸ்வரி, தூய்மைப் பணியாளா். இவா்களின் 17 வயது மகள் பிளஸ்-2 படித்து வந்தாா். இந்நிலையில், மூக்கையன் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் திங்கள்கிழமை காலையில் வேலைக்குச் சென்றுவிட்டனா்.
பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த அவா்களின் மகள் வெளியே செல்லாததால் அக்கம்பக்கத்தினா் வந்து கதவைத் தட்டியுள்ளனா். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாகப் பாா்த்துள்ளனா். அப்போது, மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அந்த மாணவியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].