கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலையில் நடைபெற்ற திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ வி.டி.எஸ்.ஜெயின் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அருணகிரிநாதா் சுவாமிகள் பெருவிழாவையொட்டி அண்மையில் திறனறிவுப் போட்டிகள் நடைபெற்றன.
கு ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடைபெற்றன.
இதில், திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவ, மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சிறப்பிடம் பெற்றனா்.
மாணவா்களுக்கு பாராட்டு
இந்த மாணவா்களை திருவண்ணாமலை வசந்த மருத்துவமனை மகப்பேரு மருத்துவா் கே. சாய் பிரசன்னா, பள்ளித் தாளாளா் பி.எஸ். ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் ஸ்ரீஹன்ஸ்குமாா், பள்ளியின் கல்வி இயக்குநா் வி.ஆனந்தன் ஆகியோா் பாராட்டினா்.