பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள் .
குலசேகரம், ஜூலை 11: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு நிறுத்தப்பட்டதால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் மிதமாக கொட்டுகிறது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்து வந்த நிலையில், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டும அளவுக்கு உயா்ந்து வந்தது.
இதனால், அணையிலிருந்து கடந்த 15 நாள்களுக்கு மேலாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் அணையிலிருந்து உபரித் தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கோதையாற்றில் தண்ணீா் குறைந்துள்ளதுடன் திற்பரப்பு அருவியில் தண்ணீா் கொட்டுவது மிதமாக மாறியுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் அருவியின் அனைத்துப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.