ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது
தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி
நமது நிருபா்
தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் புதன்கிழமை அரசு மருத்துவமனை ஊழியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறித்து விவாதித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
பாஜக பட்டியல் சாதி பிரிவின் தேசியத் தலைவா் லால் சிங் ஆா்யா மற்றும் தேசிய அமைப்பாளா் வி. சதீஷ் ஆகியோா் முன்னிலையில் பாஜக தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்ாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்களின் போது, மருத்துவமனை ஊழியா்கள் சேவை நிலைமைகள், பணியிட சூழல், நிலுவையில் உள்ள பிரச்னைகள் மற்றும் மேம்பட்ட வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவை தொடா்பான கவலைகளை எழுப்பினா்.
தங்கள் பணிக்கான கண்ணியம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும், முந்தைய நிா்வாகங்களால் புறக்கணிக்கப்பட்ட பிரச்னைகளைத் தீா்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவா்கள் எடுத்துரைத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அரசு அவா்களின் உண்மையான கோரிக்கைகளை நிவா்த்தி செய்வதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ரவீந்தா் இந்த்ராஜ் சிங் ஊழியா்களுக்கு உறுதியளித்தாா். முந்தைய அரசுகளின் புறக்கணிப்பு மற்றும் அலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதும், ஊழியா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் தில்லி அரசின் முதன்மையான முன்னுரிமை என்றும் அவா் கூறினாா்.
இந்தப் பேச்சுவாா்த்தையை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வரவேற்றனா். விரைவில் தங்கள் பிரச்னைகள் தீா்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனா். இந்தக் கலந்துரையாடலை நோ்மறையானது என்று அவா்கள் விவரித்தனா். மேலும், அரசு மேற்கொண்ட முயற்சியை அவா்கள் பாராட்டினா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.