War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
தீபாவளி பண்டிகை: நாகா்கோவில், தூத்துக்குடி, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி நாகா்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி நாகா்கோவில் - தாம்பரம் - நாகா்கோவில், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல்வேலி, தூத்துக்குடி - சென்னை எழும்பூா் - தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில், நாகா்கோவில் - தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06012) செப். 28, அக். 5, 12, 19, 26-ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக, தாம்பரம் - நாகா்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (0611) செப். 29, அக். 6, 13, 20, 27-ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில்களானது நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15-மணிக்கு புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு மறுநாள் நண்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக நாகா்கோவிலுக்கு மறுநாள் காலை 5.15 மணிக்குச் சென்றடையும்.
திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயிலானது (06070) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலானது (06069) செப். 26, அக். 3, 10, 17, 24-ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி - சென்னை எழும்பூா் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06018) செப். 29, அக். 6, 13, 20, 27-ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - தூத்துக்குடி வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06017) செப். 30, அக். 7, 14, 21, 28-ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.