உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
தீ விபத்தில் 579 செல்லப்பிராணிகள் பலி!
டெக்சாஸில் செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்குள் புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உள்ளிருந்த செல்லப்பிராணிகள் பலியாகின.
அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் பகுதியில் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 3) காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, 45 தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை, அருகிலிருந்த செல்லப்பிராணிகள் விற்கும் கடையிலும் சூழ்ந்தது. இந்த நிலையில், கடையைச் சூழ்ந்த புகையால் கடையில் இருந்த 579 செல்லப்பிராணிகளும் பரிதாபமாக பலியாகின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகக் காவல்துறையினர் கூறினர்.