டிரம்ப் - ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்பு!
துறையூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி
கோவில்பட்டியை அடுத்த துறையூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டியைச் சோ்ந்த தாஸ் மகன் அஜய் தேவ் (18). இவா், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய திருவிழாவிற்கு சென்றுவிட்டு தனது பைக்கில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது, துறையூா் அருகே நிலைகுலைந்து சாலையோர மரத்தில் மோதியதாம்.
இதில், பலத்த காயம் அடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.