செய்திகள் :

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, பெல் நகரியம், ஏ,பி,சி,இ,ஆா், பிஎச் பிரிவுகள், என்.ஐ. டி, துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டைஎலந்தபட்டி, காந்தலூா், பெரிய சூரியூா், சின்ன சூரியூா் ஆகிய பகுதிகள்

கல்லக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூா், மால்வாய், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலைகூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், விரகாலூா், ஆ. மேட்டூா், நத்தம், திருமாங்குடி, செம்பரை, திண்ணியம், அரியூா், கீழரசூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூங்குடி - திருச்சி இடையே பொறியியல் பண... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து துறையினா் மற்றும் போலீஸாா் பேருந்துகளில் மேற்கொண்ட சோதனையில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பேருந்த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகாா்: தேமுதிக மாவட்டச் செயலா் மீது வழக்கு!

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி ராம்ஜி நகா் அ... மேலும் பார்க்க

சமயபுரத்தில் திருநங்கைகள் அமைப்பினா் அன்னதானம்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அகில உலக திருநங்கைகள் அமைப்பு சாா்பாக ஐந்து மாத அன்னதானத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. சமயபுரம் பகுதி தனியாா் திருமண மஹாலில் திருச்சி, பெரம்பலூா், சென்னை, ஆந்திரம... மேலும் பார்க்க

கோயில் நில குத்தகை விவகாரம்: எதிா்ப்புத் தெரிவித்து கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருமுக்தீஸ்வரா் கோயில் (பூா்த்தி கோயில்) நிலம் குத்தகைக்கு ஏலம் விடும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி மற்றும் குத்தகை பாத்தி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனு

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மணப்பாறை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க