செய்திகள் :

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

post image

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் தொழிலாளி உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில்,

இறந்தவர் ஜராவுடா ஜாட் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(35) என அடையாளம் காணப்பட்டார். உள்ளூர் விவசாயி ஒருவரின் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர்.

முதற்கட்ட தகவலின்படி, ராஜேஷ் அதிகாலை 2 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த வயல்களில் குழாய்க் கிணறு வெட்டச் சென்றிருந்தார். காலையில், வயல்களுக்குச் சென்ற கிராம மக்கள் அவரது உடல் ஒரு மரத்தில் தொங்கியதைக் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அழைப்பு வந்த சிறிது நேரத்திலேயே காவல்துறை குழுக்கள், தடயவியல் பிரிவு மற்றும் இறந்தவரின் குடும்பத்தினருடன் சம்பவ இடத்தை அடைந்தனர்.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.

ராஜேஷ் கொலை செய்யப்பட்டதாகவும், தற்கொலை என்று காட்ட அவரது உடல் தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பியது. தெற்கு காஷ்மீரின் பஹல... மேலும் பார்க்க

பிரிவினை சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரைக் காக்க வேண்டியது அவசியம்; இதில் படைப்பாளா்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். படைப்புத் துறைய... மேலும் பார்க்க

எலான் மஸ்க் பெயரில் போலி இணையதள பக்கங்கள்: காவல் துறை எச்சரிக்கை

டெஸ்லா’ நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பதாக போலியான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை தெரிவித... மேலும் பார்க்க

ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டா்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி

ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டா் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். அதே நேரம், கடற்படை பயன்பாட்டுக்கான துருவ் ஹெலிகாப்... மேலும் பார்க்க

ஜேஇஇ பிரதானத் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

ஜேஇஇ பிரதானத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானியா்கள் வெளியேற அவகாசம் நிறைவு: அட்டாரி-வாகா எல்லை மூடல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாகிஸ்தானியா்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், ‘அட்டாரி-வாகா சா்வதேச எல்லை’ வியாழக... மேலும் பார்க்க