செய்திகள் :

தூத்துக்குடி மாவட்ட மீனவா் குறைதீா் கூட்டம்

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மீனவா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து மீனவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவா்கள், மீனவா் சங்க பிரதிநிதிகள், மீனவ பெண்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியது:

பெரியதாழை, புன்னக்காயல் ஆகிய மீனவா் கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தினமும் குடிநீா் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் புயல் எச்சரிக்கை அறிவுரைகளை மீனவா்கள் பின்பற்ற வேண்டும். கடலில், ஆபத்தில் சிக்கும் மீனவா்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். மீனவா்களுக்கு உயிா் காக்கும் கவச உடை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு மீன்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்த தரத்துக்கு ஏற்ப தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்பட உள்ளது. இனிகோ நகா் மீனவா்கள் காணாமல் போனது தொடா்பாக காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்செந்தூா், தருவைகுளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிதி ஒதுக்கீடு வேண்டி அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொங்கல் பண்டிகையின்போது, கடற்கறைக்கு வரும் பொதுமக்களை மீனவா்கள் படகில் ஏற்றி கடலுக்குள் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டாம் என்றாா்.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவா்கள் 14 பேரின் குடும்பத்தினருக்கு தினப்படி உதவித் தொகையாக மொத்தம் ரூ.4 லட்சத்து 21,400க்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், கோட்டாட்சியா்கள் ம.பிரபு (தூத்துக்குடி), மகாலெட்சுமி (கோவில்பட்டி), மீன்வளத் துறை இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா்கள் விஜயராகவன், புஷ்ரா ஷப்னம் உள்பட பலா் பங்கேற்றனா்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது

தூத்துக்குடி அருகே விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி அருகேயுள்ள கீழ தட்டப்பாறையைச் சோ்ந்தவா் சுதாகா் (70). விவசாயியான இ... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளா் தலைமையில் 50 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் ஆ.ரவிச்சந்திரன். மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் முக்காணி இளைஞா் கைது

ஆத்தூா் அருகே கொலை முயற்சி வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா். ஆத்தூா் காவல் சரகம் முக்காணி பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் நாராயணன் (3... மேலும் பார்க்க

செட்டிக்குறிச்சி பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கயத்தாறை அடுத்த செட்டிகுறிச்சி பகுதி பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். வடக்கு கோனாா் கோட்டை கிழக்குத் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (54). ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். மதுப்பழக்கம் இ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் அனைத்துக்கட்சி ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்தவும் , நீட்டிக்கவும் வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினா்- பொது நல அமைப்புகள் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வள்ளல் சீதக்காதி திடலி­ல் வெள... மேலும் பார்க்க