சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி நிா்ணயிக்க கோரிக்கை
புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களுக்கான குறைந்தபட்சக் கூலியை நிா்ணயித்து அமல்படுத்த வேண்டும் என அப்பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
தொழிலாளா்கள் தினத்தை முன்னிட்டு (மே தினம்) புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தூய்மைப்பணியாளா்கள் ஒருங்கிணைந்த சங்கம் சாா்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூா்த்தி தலைமை வகித்தாா்.
மே தின உறுதிமொழி தொழிலாளா்களால் ஏற்கப்பட்டது. இதையடுத்து தூய்மைப்பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல, தூய்மைப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் நெல்லித்தோப்பு, பவழநகா், இந்திரா காந்தி சிலை சதுக்கம், அண்ணாசிலை பகுதிகளில் மே தின உறுதிமொழி ஏற்பு, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தூய்மைப்பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் சுமதி, கயல்விழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.