சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு
தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
வைகோ (மதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் 6 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. தூய்மைப் பணியாளா்கள் தங்களது போராட்டத்தை நிறுத்திவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தூய்மைப் பணியாளா்களுக்கான தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. இருப்பினும், மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தூய்மைப் பணியாளா்களுக்கு பல நலத்திட்டங்களை முன்வைத்து நிதித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கவை. தூய்மைப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண வேண்டும்.