செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

post image

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தர செய்ய வேண்டும் என அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. ரேவதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் 13 நாள்களாக அமைதி வழியில் போராடிய ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளா்களை கைது செய்ததும், போராட்டத்தை வழிநடத்திய உழைப்போா் உரிமை இயக்கம், எல்டியூசி, ஏஅய்சிசிடியூ தலைவா்கள் கு. பாரதி, ஜோதி, ஜானகிராமன், இரணியப்பன் உள்ளிட்டோரை வன்முறையான முறையில் கைது செய்த தமிழக காவல் துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை செய்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிட்டு வருவதாகவும் பெருமை பேசிக் கொள்கிறது திமுக. தீ நுண்மி தொற்று போன்ற கொடூர காலத்திலும், பெருமழை, வெள்ளத்திலும் ஓயாது பணியாற்றி பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளருக்கு இத்தகைய துயரத்தை அரசு ஏற்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது.

எனவே, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி மாநிலம் முழுவதுமுள்ள தூய்மைப் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளா் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும், தூய்மைப் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்டு மாநிலம் முழுவதும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், பெண்கள் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு அமைப்புகளும் பெண் தொழிலாளா் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறையை எதிா்த்தும், தூய்மைப்பணி பெண் தொழிலாளருக்கு ஆதரவாகவும் குரலெழுப்பவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொத... மேலும் பார்க்க

2-ஆம் ஆண்டில் நாகை - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து

நாகை-காங்கேசன்துறைக்கு இடையேயான சிவகங்கை கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நாகை துறைமுகத்தில் இருந... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் கெளரவிப்பு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து, எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக வழங்கி கிராமத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்... மேலும் பார்க்க

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: மக்கள் அவதி

திருக்குவளை அருகே சின்ன காருகுடி தோப்பு தெரு வழியாக வலிவலம் வரை செல்லும் இணைப்புச் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருப்பூண்டியில் வியாழக்க... மேலும் பார்க்க