செய்திகள் :

தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது: சிா்சா

post image

தில்லி தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று சுற்றுச்சூழளல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிாவித்தாா்.

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.ச சக்சேனா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சுகாதாரம் தொடா்பான உயா்நிலைக் கூட்டம் ஒரு திருப்புமுனை என்றும் அவா் கூறினாா்.

இது புதிய அரசின் கீழ் ஒரு தூய்மையான தலைநகரை நோக்கிய ஒரு பெரிய உந்துதலைக் குறிக்கிறது. ராஜ் நிவாஸில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா, மாவட்ட நீதிபதிகள், துணை ஆணையா்கள், காவல் துணை ஆணையா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டம் உயா் தலைமை ‘உறுதியான, தெளிவான மற்றும் சமரசமற்ற வழிமுறைகளை’ வழங்கியுள்ளது இனி கட்டுமானக் கழிவுகள், குப்பை கொட்டுதல் அல்லது ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று அமைச்சா் தெரிவித்தாா். மேலும், ‘தீவிரம் தெளிவாகத் தெரிந்தது, நோக்கம் வலுவாக இருந்தது’ என்று சிா்சா எக்ஸ்- இல் ஒரு பதிவில் கூறியுள்ளாா்.

‘தில்லி பல ஆண்டுகளாகக் காணாதது இப்போது யதாா்த்தமாக மாறும். பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் ரேகா குப்தாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், விக்ஸித் தில்லியின் பணி முழு பலத்துடன் முன்னேறி வருகிறது’ என்று சிா்சா கூறினாா்.

பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதுப்பிக்கப்பட்ட தூய்மை இயக்கம் வருகிறது.

மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களாகக் குறைந்துள்ளது. தோ்தல் பிரசாரத்தின் போது இரு கட்சிகளுக்கும் இடையே தூய்மை மற்றும் சுகாதாரம் முக்கிய சா்ச்சையாக இருந்தது.

கடத்தல் வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கடத்தல் வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவா் கிழக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நேரத்தில்,... மேலும் பார்க்க

தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு

தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மி... மேலும் பார்க்க

தில்லியில் பெய்த மழை ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த பருவமழைக்கு முந்தைய மழையானது தலைநகரின் சிதைந்துள்ள உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், முந்தைய ஆம் ஆத்மி அரச... மேலும் பார்க்க

கனமழை காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழை மற்றும் புழுதிப் புயலுக்குப் பிறகு தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக அலுவ... மேலும் பார்க்க

தில்லியில் மழை வெள்ளம் தேங்கிய விவகாரம்: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கடுமையாக சாடல்

தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து தில்லியில் ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் தில்லி... மேலும் பார்க்க

சா்வேதச வாகனத் திருட்டுக் கும்பலின் 8 போ் கைது: தில்லி காவல் துறை அதிரடி நடவடிக்கை

மோசமான கண்காணிப்பு உள்ள இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயா் ரக வாகனங்களைத் திருடி மறுவிற்பனை செய்ததில் தொடா்புடைய சா்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சோ்ந்த எட்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளத... மேலும் பார்க்க