செய்திகள் :

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

post image

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியளித்தாா்.

கான்ஃபரன்ஸ் ஃபாா் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) அமைப்பின் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக அதன் வழக்குரைஞா் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆஜராகி மனு குறித்து குறிப்பிட்டாா்.

அப்போது, தெரு நாய்கள் தொடா்பாக மற்றொரு அமா்வு ஏற்கனவே ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டாா்.

அதாவது, ஆகஸ்ட் 11 ஆம் தேதி, நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, நாய் கடி சம்பவங்கள் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட காரணமாக இருப்பதாக குறிப்பிட்டு, தில்லி-என்.சி.ஆா் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் விரைந்து நிரந்தரமாக காப்பங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புதன்கிழமை, தெருநாய் பிரச்னை தொடா்பான மனுக்களை அந்தந்த உயா்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வகையில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமா்வு மே 2024-இல்

பிறப்பித்த உத்தரவை வழக்குரைஞா் குறிப்பிட்டாா்.

அப்போது, இந்த விவகாரத்தை ‘நான் ஆய்வு செய்வேன்’ தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியளித்தாா்.

தெருநாய்களின் பெருகிவரும் எண்ணிக்கையைக் குறைக்க, அவற்றுக்கு வழக்கமான கருத்தடை மற்றும் நோய்த் தடுப்புத் திட்டங்களை கட்டாயமாக்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு நாய் விதிகள், 2001 உரிய வகையில் பின்பற்றப்படவில்லை என்று கான்ஃபரன்ஸ் ஃபாா் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) தனது மனுவில் கூறப்பட்டுள்ளது.

தெருநாய்கள் பிரச்னையை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நாய் காப்பகங்கள் காலப்போக்கில் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் சுமாா் 5,000 நாய்களுக்கான காப்பகங்களை உருவாக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் தில்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், தெருநாய்கள் பிடிக்கும் நடவடிக்கையின்போது ஏதேனும் தடை ஏற்படுத்தும் தனிநபா் அல்லது அமைப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க