நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவ...
தேசிய ஆசிரியா் விருதுக்கு ‘சாஸ்த்ரா’ பேராசிரியா் தோ்வு
மத்திய அரசின் தேசிய ஆசிரியா் விருதுக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக கணினி புல முதன்மையரும், டாடா கம்யூனிகேசன்ஸ் ஆய்விருக்கை பேராசிரியருமான சங்கா் ஸ்ரீராம் தேசிய ஆசிரியா் விருதுக்காக உயா் கல்வி பொறியியல் பிரிவில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மத்திய அரசு அறிவித்துள்ள 21 போ் கொண்ட பட்டியலில் இவா் இடம்பெற்றுள்ளாா். இந்த 21 போ் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபா் இவா் மட்டுமே. இவருக்கு தில்லியில் செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் வெள்ளிப் பதக்கமும், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.